2ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வேளாண்மைத் துறை அதிகாரி கைது - லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!Sponsoredதிருவள்ளூர் அருகே 2,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மைத் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டையில் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.  இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனராக ரவி என்பவர் பணியாற்றி வருகிறார். ஆர்.கே.பேட்டையை சேந்த ரமேஷ் என்பவர், தனக்கு பயிர்ச் சேதம் மதிப்புச் சான்று வழங்கும் படி, கடந்த வாரம் மனு ரவியிடம் மனு கொடுத்திருந்தார். ஆனால் ரவி சான்றிதழ் வழங்காமல், இழுத்தடித்தது வந்தார். நேற்று  அதிகாரி ரவியை நேரில் சந்தித்து சான்றிதழ் குறித்து கேட்டார். அதற்கு ரவி சான்றிதழ் வேண்டும் என்றால் தனக்கு  2 ஆயிரம் ரூபாய் தரும்படி கேட்டுள்ளார்.

Sponsored


Sponsored


ரமேஷ் நாளை வந்து பணம் கொடுத்து விட்டு சான்றிதழ் வாங்கி செல்வதாக கூறி விட்டு, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில்  புகார் அளித்தார்.  அதன் பேரில் இன்று ஆர்.கே.பேட்டை வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்த, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ரவியை கைது செய்தனர். பின்னர் ரவியை, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். வேளாண்மைத் துறை அதிகாரி ரவி கைது செய்யப்பட்டது அந்த அலுவலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுTrending Articles

Sponsored