தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது!Sponsoredவரைவு வாக்காளர் பட்டியல், இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்பட்டது. இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக, இன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரியின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.  அதன் பின், இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தப் பட்டியல் அரசு சார்பில் வெளியிடப்பட்டது . அந்த அறிக்கையில், “ இந்த ஆண்டு வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் 5,82,89,379 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2,88,76,791 பேர் ஆண்கள் மற்றும் 2,94,07,404 பேர் பெண்கள், 5,184 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். காஞ்சிபுரம் சோழிங்கநல்லூர் தொகுதிதான் 6 லட்சம் வாக்காளர்களுடன், மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. அதேபோல, சென்னை துறைமுகம் தொகுதி 1.64 லட்சம் வாக்காளர்களுடன் சிறிய தொகுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இதைத் தொடர்ந்து, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்த மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் வெளியிட்டார். அந்த மாவட்டத்தில், மொத்தம் 19,98,686 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 9,93,071 பேர், பெண் வாக்காளர்கள் 10,05,515  பேர் உள்ளனர். 

Sponsored


திண்டுக்கல் மாவட்டத்தின் வாக்காளர் பட்டியலை  மாவட்ட ஆட்சியர் வினய் வெளியிட்டார். அந்த மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 17,53,396. அதில், ஆண் வாக்காளர்கள் 8,60,897 பேர். பெண் வாக்காளர்கள் 8,92,355 பேர். 

விழுப்புரம் மாவட்டத்தில், திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டார். விழுப்புரத்தில், ஆண் வாக்காளர்கள் 13,12,002 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 13,01,548 லட்சம் பேரும் உள்ளனர். மொத்தம் 26,139,18 வாக்காளர்கள். 

கரூர் மாவட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டார். மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 8 லட்சத்து 33 ஆயிரத்து 166 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 4,05, 218 பேர், பெண் வாக்காளர்கள்             4, 27,900 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன், ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். அங்குள்ள  4 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 11,02,399 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 5,45,300 ஆண் வாக்காளர்களும், 5,57,051 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 27ஆயிரத்து 323 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 805 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 148 வாக்காளர்கள் உள்ளனர். பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 075 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 640 பெண் வாக்காளர்களும், 91 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 806 வாக்காளர்கள் உள்ளனர். போடி சட்டமன்றத் தொகுதியில், 1 லட்சத்து 27 ஆயிரத்து 744 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 224 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 980 வாக்காளர்கள் உள்ளனர். கம்பம் சட்டமன்றத் தொகுதியில்,  1 லட்சத்து 31 ஆயிரத்து 125 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 878 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 032 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த மாவட்டத்தில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 267 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 28 ஆயிரத்து 547 பெண் வாக்காளர்களும், 152 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 10 லட்சத்து 43 ஆயிரத்து 966 வாக்காளர்களும் உள்ளனர். தேனி மாவட்டத்தில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல், இன்றுமுதல் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை, நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பெயர் மற்றும் இதர விவரங்கள் திருத்தம் இருந்தால், வாக்குச்சாவடிக்குச் சென்று சரிசெய்துகொள்ளலாம். வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், வரும் 9-ம் தேதி, 23-ம் தேதி மற்றும் அக்டோபர் 7 மற்றும் 14-ம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசுகையில், "கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 405218 ஆண் வாக்காளர்களும், 427900 பெண் வாக்காளர்களும், 48 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 833166 வாக்காளர்களும் உள்ளனர். கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக 01.09.2018 முதல் 31.10.2018 வரை வைக்கப்படவுள்ளன. மேலும், 08.09.2018, 22.09.2018, 06.10.2018 மற்றும் 13.10.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். 09.09.2018, 23.09.2018, 7.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய நாட்களில் (காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

1.1.2019 அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். 1.9.2018 முதல் 31.10.2018 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம்" என்றார்.

வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அந்தப் பட்டியலில் தங்களைப் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளதா இல்லையா? என்பதைப் பார்த்து சரிசெய்துகொள்ளலாம். அதேபோல, 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு 18 வயது பூர்த்தி  ஆகும் புதிய வாக்காளர்களும், தங்களது பெயரை சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.


எம்.கணேஷ், துரை.வேம்மையன்
படம்: வீ.சக்தி அருணகிரிTrending Articles

Sponsored