பாலில் விஷம் கலந்து கொடுத்த தாய்... பலியான இரண்டு குழந்தைகள்!Sponsoredசென்னை குன்றத்தூர் பகுதியில், பாலில் விஷம் கலந்து கொடுத்து, தாயே தன் குழந்தைகளைக் கொலைசெய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் மீதுள்ள கோபத்தில் இது நடந்ததா என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர், தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். இவரின் மனைவி அபிராமி.  இவர்களுக்கு அஜய், கார்னிகா என்கிற இரண்டு குழந்தைகள். இந்தத் தம்பதியின் குடும்ப வாழ்க்கை இனிமையாகச் சென்ற நிலையில், சில காரணங்களுக்காக அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய், வேலை காரணமாக நேற்றிரவு வீட்டுக்கு வரவில்லை. இன்று அதிகாலை அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு குழந்தைகளும் வாயில் நுரைதள்ளியபடி இறந்துக்கிடந்தனர்.

Sponsored


கதறி அழுத விஜய், அபிராமியைத் தேடினார். ஆனால், அவர் வீட்டில் இல்லை. விஜய்யின் அலறல் சத்தம்கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள், குன்றத்தூர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், குழந்தைகள் அஜய், கார்னிகா ஆகியோரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, குழந்தைகளை அபிராமி ஏன் கொலைசெய்தார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``விஜய் மற்றும் அவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். அஜய், கார்னிகா ஆகியோர், பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் அபிராமி இல்லாததால், அவர்மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அபிராமியின் பெற்றோர் மற்றும் உறவினர் வீடுகளில் அவரைத் தேடியபோது, அங்கு அவர் இல்லை. மேலும், அவரின் செல்போன் நம்பரும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் அஜய் 2-ம் வகுப்பு படித்துவந்தார். கார்னிகாவுக்கு 4 வயதாகுகிறது. ஆனால், அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. அபிராமியிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். மேலும், அபிராமி வீட்டிலிருந்து விஷம் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட பால் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம் . வீடு முழுவதும் சோதனை நடத்தியதில், ஒரு முக்கியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தலைமறைவாக இருக்கும் அபிராமி குறித்த முக்கியத் தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதனால், அவரை விரைவில் பிடித்துவிடுவோம். சம்பவத்தன்று, விஜய் வீட்டுக்கு வராத நேரத்தைப் பயன்படுத்திதான் குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால், எங்களின் சந்தேகம் அபிராமி மீதுதான். அபிராமிக்கு உதவியவர்கள்குறித்து விசாரணை நடந்திவருகிறோம். விஜய், அபிராமி மற்றும் அவர்களின் உறவினர்களின் செல்போன் கால் ஹிஸ்ட்ரியை ஆய்வுசெய்ததில் அபிராமிக்கு கடைசியாகப் பேசியவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அவரையும் தேடிவருகிறோம்" என்றனர். 

அபிராமி குறித்து விஜய்யிடம் போலீஸார் விசாரித்தபோது, மனைவி குறித்து சில உண்மைகளை அவர் தெரிவித்துள்ளார். அதுதான் கொலைக்குக் காரணமாக இருக்கும் என்று போலீஸார் கருதுகின்றனர். அபிராமி, சில நாள்களாக விஜய் மீது கோபத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில்,  கள்ளம் கபடமற்ற குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Trending Articles

Sponsored