'எங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாது' - ஆற்காடு வீராசாமிக்கு ஜெயக்குமார் பதில்!Sponsored``அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது'' என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்திய குடியரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரான டாக்டர் சேப்பனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறுகுறித்து எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர்,

 `தங்களிடம் பணம் இருந்திருந்தால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியிருப்போம்' என தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி  கருத்து தெரிவித்திருந்ததுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், `உலக அளவில் பணக்காரக் குடும்ப வரிசையில் தி.மு.க-தான் முதல் இடத்தில் உள்ளது. அந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாகத்தான் ஆற்காடு வீராசாமி உள்ளார். அவர்களிடம் ரூ.100 கோடி மட்டும் இல்லை. அதற்கும் அதிகமாக உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வர் குடும்பம். ஆகையால், அவர்கள் எதையும் வாங்கலாம். அந்த அளவுக்கு பணம் உள்ளது. ஆனால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாது' என்றார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored