குமரி மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 1,23,785 வாக்காளர்கள் நீக்கம்!Sponsoredகன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 785  வாக்காளர்கள் காணாமல்போனதால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே இன்று வெளியிட்டார். கடந்த 10.1.2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 14 லட்சத்து 76 ஆயிரத்து 840 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், இந்தப் பட்டியலில் 14 லட்சத்து 47 ஆயிரத்து 101 ஆக வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுகுறித்து ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே கூறுகையில், "குமரி மாவட்டத்தின் 6 சட்டசபைத் தொகுதியில், 4260 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.                33 ஆயிரத்து 399 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால், பழைய வாக்காளர் பட்டியலைவிட 29 ஆயிரத்து 139 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். வாக்காளர்கள் மரணம், வேறு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தது, தகுதியில்லாத வாக்காளர்கள் நீக்கம் காரணமாக எண்ணிக்கை குறைந்துள்ளது. வீடு வீடாக ஆய்வுசெய்து வாக்காளர் பட்டியல் சரிபார்த்துள்ளோம். வாக்காளர் பட்டியலின் காப்பி அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்குக் கொடுத்துள்ளோம். அதில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், மனு அளித்துத் தீர்வு காணலாம். வாக்காளர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு செப்டம்பர் 9 மற்றும் 23-ம் தேதிகளிலும், அக்டோபர் மாதம் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன" என்றார்.

Sponsored


Sponsored


கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், குமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 7 ஆயிரத்து 886 வாக்காளர்கள் இருந்தனர். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், 15 லட்சத்து 4 ஆயிரத்து 246 வாக்காளர்களாகக் குறைந்தனர். பட்டியல் வெளியிடும்போது,வாக்காளர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவந்தது. இப்போது, 14 லட்சத்து 47 ஆயிரத்து 101 என்ற எண்ணிக்கைக்கு இறங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளில், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 785 வாக்காளர்கள் காணாமல்போயிருப்பது குமரி மாவட்ட அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored