`ஸ்டாலினிடமிருந்து இதுபோன்ற அறிக்கையை எதிர்பார்க்கவில்லை!' - எஸ்.பி.வேலுமணி



Sponsored



``வாரிசு அடிப்படையில் தி.மு.க.வுக்கு தலைவரான மு.க.ஸ்டாலின் ஏதோ தமிழத்தின் முதல்வரானதைப்போல  நடந்துகொள்கிறார்'' என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ``அண்ணாவால் துவக்கப்பட்டு, பலர் பாடுபட்டு வளர்த்த தி.மு.க-வில் வாரிசு அடிப்படையில் தலைவரானவர்தான் மு.க.ஸ்டாலின். கட்சிக்குத் தலைவராக வந்துவிட்டு தமிழகத்துக்கு முதல்வராகி  அனைத்தும் அவரது அதிகாரத்தின் கீழ் வந்ததைப்போல என் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஸ்டாலின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. உலக பணக்காரர் பட்டியலில் 10 இடத்துக்குள் மு.க.ஸ்டாலின் குடும்பம் எப்படி வந்தது. கலைஞர் டி.விக்கு எப்படி 200 கோடி வந்தது. டெண்டர்  விடுவதில் பேக்கேஜ் சிஸ்டம் கொண்டு வந்தது ஸ்டாலின்தான். ஸ்டாலின் உள்ளாட்சித் துறையில் அமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களைக் காட்டிலும் இந்த ஐந்து ஆண்டுகள் அதிக அளவு சாதனைகளைச் செய்துள்ளோம்.

உள்ளாட்சித் துறையில் நாங்கள் செய்திருக்கும் சாதனைகளை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க ஆட்சியில் செய்ததைவிட மூன்று மடங்கு அதிகமாக அ.தி.மு.க ஆட்சியில் குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு 4,900 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 2,400 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்படுகிறது.

Sponsored


மழை நீர், திடக்கழிவு மேலாண்மை , சாலைப் பணிகள்,  வீடு கட்டும் திட்டம் என அனைத்து துறையிலும் சாதனைப் படைத்துள்ளோம். கிராமப்புறங்களில் எல்.இ.டி பல்புகள் பொருத்தியதில் 300 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு பல்வேறு பினாமி கம்பெனிகள் இருக்கலாம். ஆனால், எனக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியாது. ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கும் ஸ்டாலினிடம் இருந்து இதுபோன்ற அறிக்கையை எதிர்பார்க்கவில்லை. தி.மு.க-வில் இருந்த மற்ற தலைவர்கள் இவரைப்போல நடந்துகொள்ளவில்லை. உள்ளாட்சித் துறையில் பல்வேறு சாதனை படைத்துள்ளோம். அதனால், ஸ்டாலின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயார்’’ என்றார்.

Sponsored




Trending Articles

Sponsored