நெல்லை அருகே 200 வாழை மரங்களை வெட்டிச் சாய்த்த மர்ம நபர்கள்! விவசாயி வேதனைSponsoredநெல்லையில் வாழைத் தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள், வளர்ந்து நின்ற வாழைகளை வெட்டிச் சாய்த்த சம்பவத்தால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

நெல்லை மாவட்டம் திருப்பணிக்கரிசல்குளம் அருகே உள்ள வெட்டுவான்குளத்தைச் சேர்ந்தவர் பார்வதி. விவசாயியான இவருக்கு ஊரின் அருகில் உள்ள நெல்லையப்பபுரம் பகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளார். பயிர்செய்து 4 மாதம் ஆன நிலையில் வாழைகள் நன்கு வளர்ந்துள்ளன. வழக்கம்போல பார்வதி தன் தோட்டத்துக்குச் சென்று வாழைக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். 

Sponsored


மீண்டும் அவர் தோட்டத்துக்குச் சென்றபோது, தோட்டத்தில் இருந்த 200-க்கும் அதிகமான வாழைகள் வெட்டிச் சாய்க்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விவசாயி பார்வதி சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து வாழையை வெட்டிய மர்ம நபர்கள் யார் என்பது பற்றியும் எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

Sponsored


இது பற்றி விவசாயி பார்வதியின் மகன் முருகன் கூறுகையில், ``இந்தப் பகுதியில் போதுமான தண்ணீர் இல்லாததால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மிகுந்த சிரமத்துக்கு இடையே வாழையை வளர்த்து வருகிறோம். எங்களுக்கு எதிரிகள் யாரும் கிடையாது. ஆனால், வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி இருப்பது வேதனை தருவதாக உள்ளது. இந்த தவற்றை யார் செய்திருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் நிம்மதியாக பயிர் செய்ய முடியும்’’ எனத் தெரிவித்தார்.Trending Articles

Sponsored