பெண்களுக்கான ஆர்கானிக் சந்தை சென்னையில் தொடக்கம்!Sponsoredசென்னையில் தமிழ்நாடு மகளிர் முன்னேற்ற கார்ப்பரேஷனும் ஆர்கானிக் ஃபார்மெர்ஸ் மார்கெட் (Organic Farmers' Market) அமைப்பும் இணைந்து நடத்தும், “ஆல் வுமன் ஆர்கானிக்  மார்க்கெட்’ இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இந்தச் சந்தையில், சென்னை, காஞ்சிபுரம்,  மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்தும் இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்துகொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 40 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்த இந்தச் சந்தையில், சிறுதானிய உணவு வகைகள், கைத்தறி ஆடைகள், ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள், மண்பாண்டங்கள், ஹெர்பல் நாப்கின், விவசாயத்துக்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், வீட்டு மாடித்தோட்டத்துக்காகப் பயிற்சியும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து ஆர்கானிக் ஃபார்மெர்ஸ் மார்க்கெட் அமைப்பின் உறுப்பினர் சுதா கூறுகையில், “நாங்கள் இதற்கு முன்

இப்படியான  ஆர்கானிக் சந்தைகள், நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். ஆனால், தமிழக அரசுடன் இணைந்து நடத்துவது இதுவே முதல்முறை. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் குக்கிராமங்களில் இருக்கும் இயற்கை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்பதே இந்தச் சந்தையின் நோக்கம். இந்தச் சந்தையில், நீலகிரியிலுள்ள 'தோடா' பழங்குடி மக்களிலிருந்து, இங்கு வந்து ஸ்டால் அமைந்திருக்கின்றனர். இங்கு வந்துள்ள பொதுமக்களிடமிருந்தும் நேர்மறையான கருத்துகள் வருகின்றன. என்னிடம் ஒருவர், "இந்தச் சிறுதானிய உணவுகளைச் சமைப்பதற்கும் ஒரு பயிற்சி வகுப்பு வைத்தால் நன்றாக இருக்கும்" என்று கூறிச் சென்றார். இப்படியான கருத்துகள்தான் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல் வார இறுதி நாள்களில் இந்தச் சந்தையை நடத்தத்  திட்டமிட்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored