செல்லூர் ராஜு வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வந்த எடப்பாடி பழனிசாமி!



Sponsored



 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் மறைவையொட்டி,  துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்ல மதுரை வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அமைச்சர் செல்லூர் ராஜுவின், தாயார் ஒச்சம்மாள், மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மதுரையில் காலமானார்.அவரது இறுதி சடங்கில், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். உட்பட அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் செல்லூர் ராஜு குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி நேற்று மாலை  சேலத்திலிருந்து சாலை வழியாக மதுரை வந்தார்.

Sponsored


செல்லூரில் இருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டுக்கு சென்றவர், அவர் தாயாரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்பு, செல்லூர் ராஜு மற்றும் அவர்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்தவர் பின்பு விமானம் மூலம் சென்னை சென்றார். இதனால் கோரிப்பாளையம் சிம்மக்கல் இடையே போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

Sponsored




Trending Articles

Sponsored