இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கிளையை திறந்து வைத்த அமைச்சர்!Sponsoredஇந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கிளையை திறந்து வைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

கரூர் ஜி.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய தபால் துறையின் சார்பாக கரூரில் 5 இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கிளையினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில்  குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதையடுத்து பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதுடெல்லியில் டால்காடாரா மைதானத்தில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை (IPPB) துவக்கி வைத்தார். IPPB மொபைல் செயலியையும் பிரதம மந்திரி  அறிமுகப்படுத்தியுள்ளார்.

Sponsored


இந்தியாவிலுள்ள 650 மாவட்டங்களில் அந்தந்த தலைமை அஞ்சல் அலுவலகத்தில், அமைக்கப்பட்டள்ள (IPPB) கிளைகள் இன்று முதல் செயல்படும். கரூரில் தலைமை தபால் நிலையத்திலும், பசுபதிபாளையம் துணை அஞ்சலகம், எஸ்.வெள்ளாளப்பட்டி, பஞ்சமாதேவி மற்றும் ரெங்கநாதம்பேட்டை கிளை அஞ்சலகங்களிலும் IPPB சேவை இன்று ஒரே நேரத்தில் துவக்கி வைக்கப்பட்டது. வங்கிகள் மூலம் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாமலே, வங்கி கணக்கை துவங்கலாம். புது டெல்லியில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியின், நேரடி ஒளிபரப்பானது அந்தந்த இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Sponsored


IPPB ன் குறிக்கோள், ஏற்கனவே நிறுவப்பட்ட தபால் அலுவலக நெட்வொர்க், மூலம் பொதுமக்களுக்கு மிகவும் அணுகக்கூடிய, நம்பகமான வங்கியை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். வங்கி சேவைகள் கிடைக்காத மக்களுக்கும், தங்கு தடையின்றி நிதி சேவையில் சேர்க்கும் ஓர் அங்கமாக IPPB அமையும். IPPB ன் தனித்தன்மை என்பது நமக்கு நன்கு அறியப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த தபால்காரர் மூலம் வீட்டு வாசலில் வங்கி சேவையை கொடுப்பது ஆகும். இத்திட்டம் 'பணமற்ற பொருளாதாரம்' என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறைவேற்றும் மற்றும் சிறு சிறு செலவினங்களை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செய்வதையும் ஊக்குவிக்கும். மேலும் சிறுசேமிப்பை மக்களிடம் கொண்டு சென்று அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அஞ்சல்துறை காத்து வருகிறது" என்றார்.
 Trending Articles

Sponsored