‘சதத்தை நோக்கி பெட்ரோல், டீசல் விலை?’- பொதுமக்கள் கடும் அவதிSponsoredகச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வந்தது. இந்த முறை மாற்றப்பட்டுக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை அன்றாடம் நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.

Sponsored


கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை, இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.92 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 74.77 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலை 36 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டெல்லி, மும்பை, ஆகிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் வாகன உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored