‘என்னங்க சார் உங்க சட்டம்?’ - அறப்போர் இயக்கம் நடத்தும் மக்கள் கூட்டம்...!Sponsoredஊழலை தடுக்க, வலுவான ஊழல் சட்டங்களைக் கேட்டு அறப்போர் இயக்கம் சார்பில் வருகின்ற 23-ம் தேதி சென்னையில் மக்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு வரை எங்கும் லஞ்சம், ஊழல் செய்யாத அரசுகளை காண்பது அரிதாகிவிட்டது. எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும் அதில் இருந்து எளிதாக வந்துவிடுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் உள்ள குறைபாடுகளுக்கு எதிராக, அதன் நீதிபதிகளே வெளியில் வந்து புகார் தெரிவிக்கின்றனர்.

Sponsored


இந்நிலையில், ஊழலுக்கு எதிராக அறப்போர் நடத்திவரும் அறப்போர் இயக்கம், வருகின்ற 23-ம் தேதி, "என்னங்க சார் உங்க சட்டம்?" என்ற தலைப்பில், சென்னை மயிலாப்பூரில், வலுவான ஊழல் தடுப்பு சட்டங்களைக் கேட்டு மக்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக, அறப்போர் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் சென்று விழிப்பு உணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவையிலும் இதுதொடர்பான விழிப்பு உணர்வு கூட்டம் நடைபெற்றது.

Sponsored


அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷன், “வலுவில்லாத ஊழல் ஒழிப்புச் சட்டங்கள்தான் ஊழலுக்குக் காரணம். ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் மட்டும் வலுவாக இருந்திருந்தால் இந்நேரம் பலர் பதவியில் இல்லாமல் தண்டனையில் இருந்திருப்பர். ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும். திட்டமிட்டு ஊழல் செய்பவர்களை அதை விட புத்திசாலித்தனமாக தகர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சட்டங்களை நமது அரசுகள் இயற்ற வேண்டும். ஆனால் அதிர்ச்சி என்னவென்றால், நமது மத்திய மாநில அரசுகள், இருக்கும் சட்டங்களை இன்னும் பலவீனமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.இவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் குறைவாக இருக்கிறது. அதற்காகத்தான் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.Trending Articles

Sponsored