`ஓ.பி.எஸ். மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக இருக்கிறது!’ - டி.டி.வி.தினகரன் பதிலடிSponsored`எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் ஊழல் ஆட்சி என சொன்னவர் ஓ.பி.எஸ். அதன் பின்னர் மத்திய அரசோடு கைகோத்துக் கொண்டு துணை முதல்வராகப் பதவி பெற்றுக் கொண்டார்' என ஓ.பன்னீர்செல்வத்தை, அ.ம.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்திருக்கிறார். 

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.டி.வி தினகரன், அ.ம.மு.கவின் மாநகரச் செயலாளரான ராஜேஸ்வரன் ஏற்பாடு செய்த கட்சிக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார். பத்து நாட்டிய குதிரைகள் முன்னே செல்ல வேனில் உட்கார்ந்தபடி ஊர்வலமாகத் தினகரனை அழைத்து வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ஆதரவாளர்கள் புடைசூழ அண்ணா நகர் பகுதியில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து விட்டு இரண்டு வெள்ளை புறாக்களைப் பறக்க விட்டார்.

Sponsored


Sponsored


அதன் பிறகு பேசிய தினகரன், `ஓ.பி.எஸ் முதல்வர் பதவி இல்லையே என்பதாலும், இனி வாழ்நாளில் முதல்வர் பதவி கிடைப்பதற்கும் வாய்ப்பில்லை என்பதாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசி வருகிறார். மேடை கிடைத்து விட்டது என்பதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியிருக்கிறார்.விரக்தியோடு இருப்பதால்தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசுகிறார். அவர், பேசியது உண்மையா என தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். பதவி வெறியில் அவர் பேசுகிறார். இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தி.மு.கவுடன் இணைந்து கொண்டு தி.மு.கவிற்கு வாக்களித்தேன் என சொல்கிறார் ஓ.பி.எஸ். இந்த ஆட்சியை ஊழல் ஆட்சி என்றார். பின்னர், மத்திய அரசோடு கைகோத்துக் கொண்டு துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் மீதான நம்பகத்தன்மை என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது சதி செய்ததாக என் மீது குற்றம்சாட்டுவதை மக்களும், ஏன் அவர் மனைவியே கூட நம்ப மாட்டார்.

கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து ஸ்டாலின் செய்யவிருக்கும் சுற்று பயணம் குறித்து எனக்குத் தெரியாது. இந்த அரசு தூர்வாருகிறேன் என்கிற பெயரில் ரூ.400 கோடியை அடித்து விட்டனர். இதைக் கண்டித்து நீடாமங்கலத்தில் இன்று கண்டனப் போராட்டம் நடத்துகிறோம். கடைமடைக்குத் தண்ணீர் வராமல் இருக்கும்போது அமைதிப்படை ஓ.பி.எஸ் மற்றும் சாம்பார் வாளி அமைச்சர் ஆர்.கமராஜ் சேர்ந்துகொண்டு மன்னார்குடியில் வெற்றிக் கொண்டாட்ட கூட்டம் நடத்துகின்றனர். இதைக் கோமாளித்தனமான கூத்தாகவே நான் பார்க்கிறேன். சமூக வலைதளங்களில் ஸ்டாலின் vs தினகரன் என்ற ஹேஷ்டேக் பரவி வருவது குறித்து எனக்குத் தெரியாது. அ.ம.மு.க மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க மாபெரும் வெற்றி பெரும்' எனக் கூறினார்.

தினகரன் பறக்க விட்ட வெள்ளை புறாக்கள் சமாதானத்தைக் குறிப்பதாக இருக்குமோ என கட்சியினர் பலர் பேசிக்கொண்டது குறிப்பிடத்தக்கத்து. `தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திவாகரன் தனிக் கட்சி ஆரம்பித்தார். இந்தநிலையில் தினகரனின் தம்பி பாஸ்கரன் தனிக்கட்சி தொடங்குகிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இவை அனைத்தும் தினகரனுக்கு கொஞ்சமாவது பலவீனத்தை ஏற்படுத்தும் என பலர் பேசிவந்தனர். மேலும், இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தலும் வரவிருக்கிற இந்த சூழ்நிலையில் கட்சியின் கொடியேற்று விழாவில் தினகரன்  2 வெள்ளை புறாக்களைப் பறக்க விட்டார். இவற்றை சமாதான புறாக்களைப் பறக்கவிட்டதாகவே கட்சியினர்  பார்க்க தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்' என தினகரனின் ஆதரவாளர்கள் பேசிக் கொண்டனர்.

மன்னார்குடியில் அ.தி.மு.க சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.Trending Articles

Sponsored