மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகார் - 22 மாணவர்கள் மீது நடவடிக்கை?Sponsoredமதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 22 பேர் மீது ராகிங் புகார் எழுந்திருக்கிறது. இதனால், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் முதலாவது ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் கருத்துவேறுபாடு இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று முதலாமாண்டு படிக்கும் மாணவர்களைத் தாக்க இரண்டாம் ஆண்டும் படிக்கும் மாணவர்கள் ஹாஸ்டலுக்குள் அத்து மீறி சுவர் ஏறி குதித்து நுழைந்துள்ளனர். மேலும் தங்களது ஜூனியர்களான முதலாமாண்டு மாணவர்களை சரமாரியாக தாக்கி காயப்படுத்திவிட்டு வெளியேறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்கள் தங்களை சீனியர்கள் தாக்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து இதன் விசாரணை நடைபெற்றுள்ளது. அதில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் செய்த தவறுகள் உறுதியாகியுள்ளது.

Sponsored


இந்தநிலையில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த புகாரில் இரண்டாம் ஆண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ராகிங் தடுப்பு (Anti Ragging) கமிட்டியின் முடிவை தொடர்ந்து மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் உள்ளிட்ட சுமார் 22 மாணவர்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்ய மதுரை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

Sponsored
Trending Articles

Sponsored