`நம்ம கண்ணு முன்னாடி நடிச்சுக் காட்டுறத மறக்க முடியுமா?’ - முதியவரின் தெருக்கூத்து அனுபவம்Sponsoredகோவை சின்னவேடம்பட்டி பகுதியில் தெருக்கூத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் ,பெரியவர்கள், கல்லூரி மாணவர்கள் என அரங்கமே நிறைந்திருந்தது. மாலை 6.30 மணிக்கு தொடங்கினார்கள் ‘அடவு’ தெருகூத்து கலைஞர்கள்.

தெருக்கூத்து பார்க்க வந்தவர்களிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்தோம். தெருக்கூத்து பார்க்க வந்ததன் காரணம் குறித்து கேள்வி கேட்டோம். “நான் தெருக்கூத்து பார்த்து இருக்கிறேன். ஆனா என் பசங்களோ, பேரக் குழந்தைகளோ பார்த்தது இல்ல.இது நம்முடைய கலை. நாம்தான் போற்ற வேண்டும். நான் சின்ன வயசா இருக்கும்போது தெருவில் கூத்து கட்டி நடிப்பாங்க. இதில் பழங்கால கதைகள், மகாபாரதம், ராமாயாணம், பாஞ்சாலி சபதம், புராணக்கதைகளும் நமக்கு ஏத்த மாதிரி நடிப்பாங்க. நம்ம எல்லாம் புத்தகத்தில் படிச்சத, அப்பவே மறந்துடுவோம். ஆனா, நம்ம கண் முன்னாடி நடிச்சு காட்டுறத மறக்கமாட்டோம்” என்று பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டார் முதியவர் ஒருவர்.

Sponsored


அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு நாடக வசனம் சத்தமாக ஒலித்தது. அதைத் தொடர்ந்து இசை. வேஷம் போட்ட ஒருத்தர் கற்பூரம் காட்டி கூத்தினைத் தொடங்கி வைத்தார். அப்பொழுது, கட்டியங்காரன் வேடத்தில் இருந்தவர் (நடிகர் சதிஷ்) `வந்தனம் அய்யா வந்தனம், இன்னைக்கு நடக்க போற கூத்து என்னனு தெரியுமா?. பாஞ்சாலி சபதம்’ என்று கூத்தின் சாராம்சம் குறித்து விளக்கினார். நகைச்சுவை உணர்வுடன் அவர் தொடங்கிய விதம் பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்கை வைத்தது. அப்போது, கூத்து அரங்கில் மின்தடை ஏற்படவே, அதற்கு ஏற்றவாறு கலைஞர்கள் நடித்து, சூழலைத் திறமையாகக் கையாண்டார்கள். பாஞ்சாலி வஸ்திரம் நிகழ்ச்சியும் அரங்கேறியது.

Sponsored


மகாபாரதத்தில் ஒரு காட்சிதான் பாஞ்சாலி சபதம். அதில், பாஞ்சாலி, பாண்டவர்கள், துரியோதனன் மற்றும் சகுனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள், அனைத்து கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு சுட்டிப் பெண், தனது தாயிடம், `அது என்ன. இது என்ன’ என தொடர்ச்சியாக விளக்கம் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த சிறுமி, தற்போதுதான் முதன்முறையா தெருக்கூத்து பார்க்க வந்திருப்பது புரிந்தது.

அங்கிருந்த சில இளைஞர்களிடம் பேசுகையில், “பாட்டு பாடுறாங்க, மியூசிக் போடறாங்க. ஒரு புது அனுபவமா இருந்துச்சு. படத்துலதான் பாத்துருக்கோம். ஆனா, இங்க வந்து நேர்ல பார்த்தது எங்களுக்கு புது அனுபவம். நாங்க லேப்டாப், சமூக வலைதளம், செல்போன் இதிலே பிசியா இருந்துட்டோம். இதைப்பத்தி தெரிஞ்சுக்கல. ஆனா, இந்த மாலைப் பொழுது எங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது’’ என்றார்கள்.Trending Articles

Sponsored