`உடல்நலன் பெற்று பொதுப் பணிகளைத் தொடர வேண்டும்' - வீடு திரும்பிய விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!Sponsoredஉடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார். 

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர், தொடர்ச்சியாக சிகிச்சையை மேற்கொண்டுவருகிறார். இதற்கிடையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த விஜயகாந்த், கருணாநிதி மறைவுக்குப் பின்னர் நாடு திரும்பினார்.

Sponsored


பின்னர், தே.மு.தி.க அலுவலகத்தில் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில், தற்போது உடல் நலக் குறைபாட்டால் அவர் சென்னை போருரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகப் பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், இன்று காலை சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார். அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார்.

Sponsored


இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், 'மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இல்லம் திரும்பியிருக்கும் விஜயகாந்த், மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று,பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். Trending Articles

Sponsored