`கருணாநிதியின் மகன் நான்; சொன்னதைச் செய்வேன்!’ - அழகிரி காட்டம்Sponsoredசென்னையில் நடத்தவுள்ள அமைதிப் பேரணி குறித்து, ஆதரவாளர்களுடன் அழகிரி 10வது நாளாக இன்று ஆலோசனை நடத்தினார்.

கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கட்சியில் சேர்க்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும் தன் பலத்தை காட்டும் வகையிலும் சென்னையில் வரும் 5ம் தேதி பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டு வருகிறார் அழகிரி. இதற்காக  மதுரை சத்யசாய் நகரிலுள்ள தன் இல்லம் முன்பாக கடந்த 24 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கினார். இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

Sponsored


ஆலோசனைக் கூட்டத்தின் 10வது நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "நான் தலைவரின் பிள்ளை. சொன்னதைச் செய்வேன். சென்னை அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்" என்றார். அவரிடம்,"மு.க. ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியும், அங்கிருந்து அழைப்பு ஏதும் வரவில்லையே" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதுபற்றி் கருத்துக் கூற விரும்பவில்லை" என்றார். ஆலோசனைக் கூட்டத்தை இன்றுடன் முடித்துக் கொண்டு பேரணி வேலைகளை மேற்பார்வையிட அவர், சென்னை கிளம்புகிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

Sponsored
Trending Articles

Sponsored