இரான் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் - குடும்பத்தினர் சோகம்!Sponsoredதுபாயில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக இரான் நாட்டுக் கடற்படையால் தமிழக மீனவர்கள் 6 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படை அச்சுறுத்தல், சிறைப்பிடிப்பு  மற்றும் மீன்வரத்து குறைவு போன்றவற்றால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் வாழ்வாதாரம் வேண்டி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பலர் மீன்பிடி கூலிகளாகச் சென்றுள்ளனர். இந்த நிலையில், கீழக்கரை தாலுகா களிமண்குண்டு பகுதி மங்களேசுவரி நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் பூமி, ராமநாதபுரம் வைரவன்கோயில் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் பாலக்குமார், திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் சதீஷ், தங்கராஜ் மகன் துரைமுருகன், செல்லையா மகன் அலெக்ஸ்பாண்டியன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த மில்டன் ஆகிய 6 பேரும் துபாய்க்கு மீன்பிடி ஒப்பந்தக் கூலித்தொழிலாளர்களாக பணி செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்றிருந்தனர்.
 
இவர்கள் 6 பேரும் துபாய் நாட்டு கடல் பகுதியில்  படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இரான் நாட்டுக் கடற்படையினர், தங்கள் நாட்டு கடல் பகுதிக்குள் ஊடுருவி வந்ததாக கூறி 6 மீனவர்களையும் சனிக்கிழமை நள்ளிரவில் சிறைப் பிடித்துச் சென்றுவிட்டனர். இது குறித்து தகவல் மீனவர்களின் குடும்பத்தினருக்கு இன்று தெரியவந்தது. இதையடுத்து இரான் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored