ரஜினிகாந்த் அண்ணன் மனைவி காலமானார்: பெங்களூரு விரைந்தார் ரஜினி!Sponsoredரஜினிகாந்த் மிகவும் மதிக்கும் அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் மனைவி பெங்களூரு நகரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து அறிந்ததும் மிகவும் துயரம் அடைந்த ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூரு விரைந்தார். 

ரஜினியின் பெற்றோரான ரானோஜிராவ், ராம்பாய் ஆகியோர், அவர் சிறுவயதாக இருந்தபோதே உயிரிழந்தனர். அதனால் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் மற்றும் அண்ணி கலாவதிபாய் ஆகியோர் ரஜினியை மகனைப் போல வளர்த்தார்கள். ரஜினியை சென்னைக்கு அனுப்பி திரைப்படத்தில் நடிக்க வைத்தது முதல் அவரது ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவர்களின் பங்கு அதிகம் உள்ளது. அதனால் ரஜினி எந்த புதிய முயற்சியில் ஈடுபட்டாலும் அண்ணன், அண்ணி ஆகியோரிடம் ஆலோசனை கேட்டு அவர்களின் ஆசியுடனேயே பணிகளைத் தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Sponsored


ரஜினியால் மிகவும் மதிக்கப்பட்ட அண்ணி கலாவதிபாய்க்கு சிறுநீரகக் கோளாறு, சர்க்கரைநோய் ஆகியவை இருந்ததால் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கலாவதிபாய்க்கு நேற்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது. 

Sponsored


அண்ணி இறந்த தகவல் கிடைத்ததும் மிகவும் வருத்தம் அடைந்த ரஜினிகாந்த் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். காலை 8.40 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றார். கலாவதிபாயின் உடல் அவர்களின் ‘குருகிருபா’ இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்களும் நண்பர்களும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 70 வயது நிரம்பிய கலாவதிபாய்க்கு ராமகிருஷ்ணன், மகாதேவ், பாண்டுரங்கன், ஆகிய 3 மகன்களும் ராதாபாய் என்ற மகளும் உள்ளனர். கலாவதிபாயின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடக்க உள்ளது.Trending Articles

Sponsored