ஆளுநர் புரோஹித்தின் வாகனத்தை முந்திச்சென்ற மாணவர்கள் மீது வழக்கு பதிவு!Sponsoredசென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காரை முந்திச்சென்றதாகக் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


 

சென்னை கோட்டூர்புரம், படேல் சாலையில் இன்று காலை ஆளுநரின் வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக  வந்த இருசக்கர வாகனங்கள் ஆளுநரின் வாகனத்தை நொடிப் பொழுதில் கடந்து சென்றன. மொத்தம் 4 இரு சக்கர வாகனங்கள் ஆளுநரின் வாகனத்தை முந்திச் சென்றுள்ளன.  அந்த இருசக்கர வாகனங்களை மடக்கிப் பிடித்த போக்குவரத்து காவலர்கள் அவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Sponsored


அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர், தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட  7 பேர் மீது அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Sponsored
Trending Articles

Sponsored