விமானத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷமிட்ட பெண் -15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு!



விமானத்தில், ”பாசிச பா.ஜ.க ஒழிக” என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசையை நோக்கி கோஷம் எழுப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற பெண்மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sponsored


நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், 1,000 பேர் பா.ஜ.க-வில் இணையும் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம்மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இந்த விமானத்தில், கனடாவில் பி.ஹெச்டி ஆராய்வு செய்யும் மாணவியான, தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற பெண்ணும் பயணித்துள்ளார். அவர் தமிழிசையைப் பார்த்து, “பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக!” எனக் கைகளை உயர்த்திக் கோஷம் எழுப்பினாராம்.

Sponsored


விமானம் தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பறை அருகில், மீண்டும் தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்திக் கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sponsored


பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர்  மற்றும் இண்டிகோ விமான நிறுவன அதிகாரி ஆகியோரிடம் தமிழிசை புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவர்மீது 505(1)(B), 290 மற்றும் 75 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி ஜே.எம் நீதிமன்றத்தில், நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

ஷோபியாவை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், “தன் மகளைத் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக  ஆராய்ச்சி மாணவி ஷோபியாவின் தந்தை, தமிழிசை செளந்தரராஜன் உட்பட பா.ஜ.க-வினர் 10 பேர்மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



Trending Articles

Sponsored