`நானும் சொல்கின்றேன்..! பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக!' தூத்துக்குடி பெண் கைதுக்கு மு.க.ஸ்டாலின் ஆவேசம்



Sponsored



நானும் சொல்கின்றேன்... ``பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் பிஹெச்.டி படிக்கும் ஆராய்ச்சி மாணவியான லூயிஸ் ஷோபியா என்பவர் பயணித்துள்ளார். அப்போது, விமானத்தில் வைத்து பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக என்று கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினார். மேலும், தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடனும் மீண்டும் தமிழிசையைப் பார்த்து பாசிச பா.ஜ.க ஒழிக என்று கோஷம் எழுப்பியுள்ளார்.

Sponsored


அதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் அந்தப் பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உடனே, நீதிபதி தமிழ்ச்செல்வி, ஷோபியாவை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். தமிழக காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், `ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன்! `பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக!’ ’ என்று பதிவிட்டுள்ளார். 

Sponsored




Trending Articles

Sponsored