கோசமிட்டால் கைதா? நடப்பது மக்களாட்சியா, மன்னராட்சியா? - ஷோபியா கைதுக்கு சீமான் கண்டனம்



``சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இருக்கும்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்த்து விமானத்தில் முழக்கமிட்ட சோபியா என்ற பெண் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது`` என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Sponsored


இதுகுறித்து தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் `` பா.ஜ.க-வை எதிர்த்து முழக்கமிட்ட ஒரே காரணத்தினால் கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த நாடு காலம் காலமாய் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகக் கொண்டிருக்கிற கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிற கொடும் தாக்குதலாகக் கருதுகிறேன். கோசமிட்டால் கைதா? நடப்பது மக்களாட்சியா. மன்னராட்சியா இங்கு நடப்பது ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்று கேள்வி எழுகிறது.

Sponsored


சகிப்புத்தன்மையற்ற, எதிர் கருத்து எதுவும் தோன்றி விடக்கூடாது என்பதான ஏதேச்சதிகார உளவியல் என்பது பா.ஜ.க கட்சியின் அடிப்படை குணாதிசயங்களாக மாறி இருக்கின்றன என்பதற்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொடர்ச்சியாக மக்களை ஆண்டு கொண்டிருக்கின்ற பா.ஜ.க அரசின் எதிர் கருத்து கொண்டோரை எல்லாம் எப்படியாவது ஒடுக்க முயல்வது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

Sponsored


தொடர்ச்சியாகத் தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட இருக்கிற மக்கள் நல எதிர்ப்பு திட்டங்களால் தமிழின இளையோர் மிகுந்த வெறுப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தச் சம்பவம் வெளிக்காட்டுகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொண்டு அனுப்பி இருக்க வேண்டிய ஓர் இளம்பெண்ணை எதிர்த்து முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக கைது செய்திருப்பது என்பது தேவையற்ற கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தக் கைது நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டிருக்கிற சோபியாவை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்`` என்று கூறப்பட்டுள்ளது.



Trending Articles

Sponsored