`அண்ணணுக்கு ஏற்பட்ட அவமானம் காத்திருந்து பழிதீர்த்த தம்பி!' - டெய்லர் கொலையில் திடுக்கிடும் தகவல்Sponsoredகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தேவரபெட்டா பகுதியைச் சேர்ந்த  ராஜப்பாவின் மகன் சசிக்குமார். இவர் தளியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். கடந்த 31-ம் தேதி மாலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. செல்போனும் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டு இருக்கவே. கலக்கம் அடைந்த சசிக்குமார் தந்தை ராஜப்பா தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தளி அடுத்துள்ள மதகொண்டப்பள்ளி சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே முட்புதரில் வாலிபர் ஒருவரின் சடலம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக தளி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற தளி போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது சசிக்குமார் என்பது தெரிய வந்தது. இரும்புக் கம்பியால் தாக்கியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

Sponsored


தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்ட சசிக்குமாரின் அக்கா சித்ராவை அதே ஊரைச் சேர்ந்த அம்ரேஸ் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் பிரச்னையில், சசிக்குமார் தன் அக்காவைக் காதலிப்பதாக டார்ச்சர் செய்த அம்ரேஸ்சை அடித்திருக்கிறார். இது தொடர்பாக கடந்த ஆண்டு தளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு, சித்ராவுக்கும் வேறு ஒரு இடத்தில் திருமணம் முடிந்துவிட்டது. ஆனால், தனது அண்ணன் அம்ரேஸ்க்கு ஏற்பட்ட அவமானம் தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானமாக நினைக்கிறார் அவரின் தம்பி சசிக்குமார். இதற்குப் பதில் அடி கொடுக்க நண்பர்களுடன் திட்டம் தீட்டுகின்றார்.

Sponsored


அதற்காக நண்பர்கள் மல்லேஷ், முரளி, சங்கரப்பா ஆகியோருடன் கடந்த 31-ம் தேதி டெய்லர் சசிக்குமாரை சமாதானம் ஆகி விடலாம் என்று கூறி மது அருந்த அழைத்துச் சென்றனர். ஆஞ்சநேயர் கோயில் அருகே மது அருந்திய பிறகு டெய்லர் சசிகுமாரை இரும்புக் கம்பியால் அடித்து, அரிவாளால் தலை, முகத்தைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உடலை வீசிவிட்டுச் சென்றனர். டெய்லர் சசிக்குமார் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை அருகில் இருந்த ஏரியில் போட்டுவிட்டனர்.

டெய்லர் சசிக்குமார் படுகொலைக்கு காரணமான சசிக்குமார், மல்லேஷ், முரளி, சங்கரப்பா ஆகிய நான்கு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். முடிந்துபோன காதல் பிரச்னையில் ஒரு வருடம் கழித்து  டெய்லரை கடத்தி கொடூரமாகக் கொலை செய்து உடலை வீசிச் சென்ற பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Trending Articles

Sponsored