`கூட்டம் கலையக்கூடாது!' - அமைச்சர் வீரமணியின் எம்.ஜி.ஆர் ஸ்டைல்Sponsoredபொதுக்கூட்டம் தொடங்கும் முன் பாட்டுப்பாடி தொண்டர்களைக் குஷிப்படுத்தினார் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி.

வேலூர் மாங்காய் மண்டி மைதானத்தில் அ.தி.மு.க அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (3.9.2018) அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Sponsored


துணை முதல்வரிடம் தனது கெத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் பிரமாண்டமான மக்கள் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், துணை முதல்வர் வரும் வரை கூட்டம் கலையாமல் இருக்க அமைச்சர் வீரமணி மதியம் 1 மணி முதல் ஸ்டேஜை சுற்றிச் சுற்றி வந்து மக்கள் கலைந்து செல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர்கள் அழைத்து வந்த தொண்டர்கள் அங்குமிங்குமாக சென்றுகொண்டிருந்தனர். இவர்களை ஓர் இடத்தில் அமரவைக்க யோசித்த வீரமணி, பாட்டுக் கச்சேரி மேடைக்குச் சென்று ``நாளை நமதே இந்த நாளும் நமதே" என்ற பாடலை உற்சாகத்துடன் பாட ஆரம்பித்துவிட்டார். அப்போது. எம்.ஜி.ஆர் ஸ்டைலில் தனது கைகளை அசைத்து குஷிப்படுத்தினார். இதைக்கண்ட தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் அண்ணன் வீரமணி... வீரமணி என்று கோஷம் எழுப்பிக்கொண்டும், சிலர் அவர் பாட்டுக்குப் பின்பாட்டு பாடிக்கொண்டும்  நடனமாடி பட்டையைக் கிளப்பினர். 

Sponsored
Trending Articles

Sponsored