விநாயகர் சதுர்த்தி விழா - பிள்ளையார்பட்டியில் விமரிசையாக நடைபெற்ற கொடியேற்றம்Sponsoredபிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகா் ஆலயம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று காலையில் மூலவருக்கு முன்பு உள்ள கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, தற்பைப் புல் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகா் சதுர்த்தி பெருவிழாவாகும். இந்த விழா வரும் செப்டம்பர்  13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நாள்தோறும் விநாயகா் பெருமான் பல்வேறு வானத்தில் எழுந்தருளி  திருவீதி உலா நடைபெறும். எட்டாம் நாள் திருவிழா அன்று வருடத்துக்கு ஒரு முறை சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அதே நாளில் மாலையில் தேரோட்டம் நடைபெறும். விநாயகர் சதுர்த்தியன்று 16 படி அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருள்களைக் கொண்டு ராட்சத கொலுக்கட்டை செய்து விநாயகருக்கு படையல் செய்த பிறகு, சதுர்த்தி விரதம் இருந்த பக்தர்களுக்கு அந்தக் கொலுக்கட்டை பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.

Sponsored


கி.பி.3-ம் நூற்றாண்டைச் சோ்ந்த குடவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசிக்க இவ்விழா காலங்களில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் கூடுவார்கள். இதன் காரணமாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Sponsored
Trending Articles

Sponsored