`எதற்காக வந்தார் சஞ்சய் தத்?' - திருநாவுக்கரசருக்கு எதிராகத் திரண்ட கோஷ்டிகள்Sponsoredதமிழக காங்கிரஸ் கமிட்டியில் நீடித்துவரும் கோஷ்டி மோதல், மேலிடத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள ராகுல்காந்தி, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றதிலிருந்து, அவருக்கும் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் இடையே மோதல் தொடர்ந்துவருகிறது. இதனிடையே, தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத், நேற்று சென்னை வந்தார். அவரது வருகையைத் தொடர்ந்து, இன்று மாநில, மாவட்டத் தலைவர்கள் மற்றும்  நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற்றுவருகிறது.

Sponsored


மேலிடப் பார்வையாளர் வருகைகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், " முன்னாள் பிரதமர் வாஜ்பாயைப் பற்றி அண்மையில் புகழ்ந்துபேசினார் திருநாவுக்கரசர். இதுதொடர்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவிக்கும்போது, 'திருநாவுக்கரசர் மீண்டும் பா.ஜ.க-வுக்குச் சென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு' என்றார். இருவருக்குமிடையேயான இந்த கருத்து மோதல்கள் மேலிடத்துக்குச் சென்றது. இதுதொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்யுமாறு மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கு, ராகுல் காந்தி உத்தரவிட்டிருந்தார். அவரும், இரண்டு தரப்பிலும் விசாரித்து அறிக்கையைத் தாக்கல்செய்தார். இந்த அறிக்கையின் எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவரை மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டார் ராகுல். அதன் தொடர்ச்சியாகத்தான் சஞ்சய் தத் வந்தார். சென்னையில் நான்கு நாள்கள் தங்கியிருந்து தமிழக காங்கிரஸில் உள்ள பிர்சனைகள்குறித்து ஆய்வுசெய்ய உள்ளார்.  தற்போது மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். இதைப் பார்க்கும்போது, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றுவது உறுதி'' என்றார்.

 

Sponsored
Trending Articles

Sponsored