`இதயமும் நுரையீரலும்தான் இலக்கு!’ - உறுப்பு தானத்தில் நடக்கும் பல கோடி மோசடிSponsored`மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினருக்கு மோசடியாக விற்கப்படுகின்றன' என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'இந்த விவகாரத்தில், சி.பி.ஐ விசாரணை வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் மருத்துவ சங்க நிர்வாகிகள். 

உடல் உறுப்பு தானம் விவகாரம் தொடர்பாக, பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், `தமிழகத்தைச் சேர்ந்த நோயாளிகள் பலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், சேலம் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து கட்டாயமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகளை வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதில் விதிமீறல்கள் நடந்துள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த மே 18-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சாலைவிபத்தில் சிக்கி காயமடைந்தார். சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அடுத்த இரு நாள்களில் மூளைச்சாவு அடைந்தார். 

Sponsored


மணிகண்டனிடமிருந்து பெறப்பட்ட இதயமும் நுரையீரலும் விதிகளை மீறி வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்காகப் பெறப்பட்ட இதயம், சட்டவிரோதமாக லெபனான் நாட்டு நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்ட நுரையீரல், அங்கு காத்திருப்புப் பட்டியலில் இருந்த 5 உள்ளூர் நோயாளிகளுக்கு வழங்கப்படாமல், இஸ்ரேல் நாட்டு நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Sponsored


கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நிலையில்,

அதுதொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை; எந்த மருத்துவமனை மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை அடையாறு, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில்தான் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாகவும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சராசரியாக ரூ.12 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். 

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், 'உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஆனால், தற்போது முறைகேடுகளும் அதிகரித்துவருகின்றன. அதைத் தடுக்க வேண்டும். சமீப காலங்களில் இதயமும் நுரையீரலும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, நீதிமன்றத்தின் வழிகாட்டுதலிலும் கண்காணிப்பிலும் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை' என்றவர்,

"மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குபவர்கள், முதலில் தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அங்கே, பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் உறுப்புகளை வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தால், அவருடைய உறுப்புகள், அந்த மருத்துவமனை நோயாளிக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடையும் உடலின் உறுப்புகள், அரசு மருத்துவமனையில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் நோயாளிக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால், இதில்தான் அதிக அளவிலான விதிமீறல்கள் நடைபெற்றுவருகின்றன' என்று தெரிவித்தார். Trending Articles

Sponsored