நெல்லையப்பர் கோயிலில் படக்குழுவினருடன் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ்!Sponsoredநெல்லையப்பர் கோயிலுக்கு வருகை தந்த நடிகர் தனுஷ், சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். அத்துடன், நெல்லையப்பர் கோயில் வளாகத்தைச் சுற்றிப்பார்த்த அவர், கோயிலின் யானை காந்திமதியிடம் ஆசிபெற்றார்.

முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்துவரும் 'மாரி-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு, நெல்லை மாவட்டம் தென்காசி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவருகிறது. இதற்காக, தனுஷ் கடந்த 10 நாள்களாக நெல்லையில் முகாமிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றுவருகிறார்.  தனுஷ் இன்று, திரைப்படத்தின் கதாநாயகி சாய்பல்லவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் நெல்லையப்பர் கோயிலுக்கு வருகைதந்தார். 

Sponsored


கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற படக்குழுவினர், கோயிலின் பிராகாரத்தைச் சுற்றிப்பார்த்தனர். நெல்லையப்பர் கோயிலில் உள்ள இசைத்தூண், கலைநயம் மிகுந்த சிற்பங்கள் ஆகியவற்றை அவர்கள் ஆச்சர்யத்துடன் பாரத்து ரசித்தார்கள். கோயிலின் வரலாறு பற்றியும் அர்ச்சகர்களிடம் கேட்டு அறிந்தனர். பின்னர், நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானையிடம் அனைவரும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். 

Sponsored


தனுஷ் மற்றும் திரைப்படக் குழுவினர் கோயிலுக்கு வந்த தகவல் பரவியதால், அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினார்கள். அதனால் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவசரமாக படக்குழுவினர் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர். தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும், சில தினங்களுக்கு நெல்லை மாவட்டத்தில் படப்பிடிப்பு நடைபெறும் என 'மாரி-2' படக்குழுவினர் தெரிவித்தனர்.    Trending Articles

Sponsored