``பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டனர்” - அஞ்சலி செலுத்திய அழகிரி பேட்டி#LiveUpdatesSponsoredஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்!

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க அழகிரி, ``கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் இது நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். 

Sponsored


Sponsored


அழகிரி தலைமையில் திருவல்லிக்கேணியில் தொடங்கிய அமைதிப் பேரணி தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம்:

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள அவரது ஆதரவாளர்கள் பெரிய பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம் என்று எழுதப்பட்டுள்ளது. 

பேரணியின் முடிவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அழகிரி அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். 

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணிக்காக சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் பேசும் மு.க அழகிரி....... 

கறுப்புச் சட்டை அணிந்து மு.க அழகிரி அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதிக்கு வந்தார். அவரின் மகன் துரை தயாநிதி அழகிரியும் உடன் உள்ளார். இதைத்தொடர்ந்து அமைதிப் பேரணி தொடங்கியது.

அழகிரி சார்பில் நடத்தப்படும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அழகிரி மாஸ்க் அணிந்துள்ளனர். பேரணியில் கலந்துகொண்டுள்ளவர்கள் அழகிரி படங்கள் கொண்ட பதாகைகளை கையில் கொண்டுள்ளனர். 

அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் வரை அதிக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரின் மகனாக மு.க அழகிரி, தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் நான் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வேன் என வலியுறுத்திவந்தார். இதற்கிடையில் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதியின் 30-வது நாள் நினைவுநாள் அமைதிப் பேரணி நடைபெறும் என்றும் இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார். இன்று அந்தப் பேரணி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இரவு முதல் மதுரையில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு கருணாநிதியின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் அமைதிப்பேரணி தொடங்கவுள்ளது. இதற்காக மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் சென்னை வந்துள்ளார்கள். Trending Articles

Sponsored