`தி.மு.க-வில் இருந்து எத்தனை பேரை நீக்குவார்கள்? - அழகிரி ஆதரவாளர் மன்னன் ஆவேசம்Sponsored``தி.மு.க-வில் இருந்து எத்தனை பேரை நீங்குவார்கள்'' என மு.க.அழகிரி ஆதரவாளர் மன்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் கருணாநிதியின் 30-வது நாள் நினைவு நாள் அமைதிப் பேரணி மு.க.அழகிரி தலைமையில் நடைபெற்று வருகிறது. அழகிரியின் ஆதரவாளர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகே தொடங்கிய பேரணி மெரினாவை நோக்கி செல்கிறது. பேரணியில் பங்கேற்ற மதுரை முன்னாள் மேயரும், அழகிரியின் ஆதரவாளருமான மன்னன், ``அழகிரியை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற தி.மு.க நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினர். ஆனால், இன்று லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அமைதிப் பேரணியில் பங்கேற்றுள்ளனர். உங்களால் எத்தனை பேரை நீக்க முடியும்? கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் தி.மு.க-வினர்தான்'' எனத் தெரிவித்துள்ளார்.

Sponsored


முன்னதாக  நேற்று, மதுரையிலிருந்து சென்னை வந்த மு.க.அழகிரியை வரவேற்ற தி.மு.க நிர்வாகி ரவியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை தற்காலிகமாக நீக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

Sponsored
Trending Articles

Sponsored