`யார் அதிக ஓட்டு வாங்குறான்னு பார்க்கலாமா?'- ஆளும்கட்சிக்கு தங்க தமிழ்ச்செல்வனின் இடைத்தேர்தல் சவால்!Sponsored"வரும் இடைத்தேர்தலில் யார் அதிக ஓட்டு வாங்குகிறார்கள் எனப் பார்க்கலாம்" என்று ஆளும்கட்சிக்கு தங்க தமிழ்ச்செல்வன் சவால் விடுத்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளான இன்று, தேனி மாவட்ட சின்னமனூர் சீபாளகோட்டை சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார், அ.ம.மு.க-வைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சிக்கு சேலஞ்ச் விடுவதாகக் கூறினார்.

“வரும் இடைத்தேர்தலுக்கு முன்பாக கூட்டணிக்கு வாய்ப்பு உண்டு. அல்லது, இடைத்தேர்தலுக்குப் பின்னால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்தான் நம்பர் ஒன் கட்சியாக இருக்கும். அப்போது, பிரகாசமான கூட்டணி அமையும். வரும் இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மட்டுமே போட்டி. நான், ஆளும் கட்சிக்கு சேலஞ்ச் விடுகிறேன். யார் அதிக ஓட்டு வாங்குகிறார்கள் என்று பார்க்கலாமா? என் சவாலை ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்துங்கள்” என்றார்.

தேனி மாவட்டத்தில் மணல் கொள்ளை நடப்பதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் 25 வருடங்களாகக் கட்சியில் இருக்கிறேன். ஒருநாள்கூட மணல் பக்கம் போனதே இல்லை. என் உறவினர்களும் அப்படித்தான். ஆனால், ஓ.பி.எஸ் குடும்பம் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored