`கருவறை, வகுப்பறை இரண்டுமே முக்கியமானது!' - முதல்வர் பழனிசாமி அறிவுரைSponsoredகருவறையும், ஆசிரியர் இருக்கும் வகுப்பறையும் முக்கியமானது எனச் சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சென்னைக் கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது, தூய்மைப் பள்ளி விருது உள்ளிட்டவை வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கருவறையும், ஆசிரியர் இருக்கும் வகுப்பறையும் வாழ்வில் முக்கியமானது. கல்வியறிவு இல்லாத சூழலை அ.தி.மு.க அரசு உருவாக்கியுள்ளது'' என்று தெரிவித்தார்.

Sponsored


Sponsored


இந்த விழாவில், 363 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. 40 பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளிகள் விருதும் விழாவில் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டைப் பொறுத்தவரை 3073 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் தெரிவித்தார்.Trending Articles

Sponsored