`3 மீட்டர் வாய்க்காலை ஒரு மீட்டராக்கிட்டாங்க!’ - குமுறும் கல்லணைக் கால்வாயோர குடியிருப்புவாசிகள்Sponsoredஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோதிலும், தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட இன்னும் பல ஊர்களுக்குத் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் வேதனையில் தவிக்கிறார்கள். இவர்கள், தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே உள்ள முருகன் நகர், விஜயா நகர் பகுதிகளுக்குச் சென்று பார்த்தால் இதயமே வெடித்துவிடும். காரணம், விவசாயத்துக்கு வந்து சேர வேண்டிய தண்ணீர், இங்கு யாருக்கும் பயன்படாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. 

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே ஓடக்கூடிய கல்லணைக் கால்வாயிலிருந்து களிமேடு கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டுசெல்வதற்கான வாய்க்கால் இங்கு அமைந்துள்ளது. இதன் புனரமைப்புப் பணியில் நடைபெற்ற ஊழலால், வாய்க்காலில் செல்லும் தண்ணீர் கீழே வழிந்தோடி குடியிருப்புக்குள் தேங்கி நிற்கிறது.

Sponsored


அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடம் நாம் பேசியபோது,‘’இங்குள்ள வாய்க்காலின் இரு கரைகளுமே நல்லநிலையிலதான் இருந்துச்சு. ஆனால், தேவையே இல்லாம நல்லா இருந்த கரைகளை இடிச்சிப் போட்டுட்டு, புனரமைப்புப் பணிகள்னு சொன்னாங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள். இதுக்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வாய்க்காலோட உண்மையான அகலம் 3 மீட்டருக்கு மேல இருந்துச்சு. ஆனால், இதை டெண்டர் எடுத்த கான்ட்ராக்ட்காரரும் அதிகாரிகளும் சேர்ந்து பணத்தை சுருட்டுறதுக்காக, வாய்க்காலோட அகலத்தை ஒரு மீட்டர் அளவுக்கு சுருக்கிட்டாங்க. கரைகளோட உயரத்தையும் குறைச்சிட்டாங்க. இதனால், வாய்க்கால்ல ஒடக்கூடிய தண்ணீர் கரைகளை மூழ்கடிச்சு, முருகன் நகர், விஜயா நகருக்குள் குளம் மாதிரி தேங்கி நிக்கிது. கடந்த ஒன்றரை மாசமா தொடர்ச்சியா எங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் வந்துக்கிட்டே இருக்கு. இதனால் நாங்க ரொம்ப சிரமப்படுறோம்” என்று புலம்புகிறார்கள்.  

Sponsored
Trending Articles

Sponsored