தமிழக முதல்வருடன் டி.ஜி.பி ராஜேந்திரன் சந்திப்பு!Sponsoredதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார்.


குட்கா ஊழல் தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனை முடிவுக்கு வந்தது. வரலாற்றில் முதன்முறையாக,  முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. அதேபோல தற்போது, முதன்முறையாக டி.ஜி.பி ஒருவரின் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சி.பி.ஐ சோதனை நிறைவடைந்த சில மணி நேரத்திலேயே, சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் டி.ஜி.பி ராஜேந்திரன். இதில் சி.பி.ஐ ரெய்டு குறித்தும், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக, குட்கா ஊழல் தொடர்பாக சோதனை குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னிலை விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored