`உங்களைச் சேர்த்து வைக்கிறேன்' - பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!Sponsoredகாதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சாவுக்கு காரணமான பெண்ணின் தாய்மாமன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


 
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் எல்லைக்கு உட்பட்ட உப்பிடமங்கலம் அருகிலுள்ள ஜோதிடத்தைச் சேர்ந்தவர் வெங்கட். இவரின் மகன் பிரகாஷ். இவர் உப்பிடமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். இதே பள்ளியில், திருச்சி மாவட்டம், வீரப்பூர் அருகிலுள்ள அமையபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகளும் ப்ளஸ் டூ படித்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் விவகாரம் வெளியில் தெரிந்ததால், இருதரப்பினரும் இருவரையும் பிரித்தனர். இதனிடையே பெண்ணின் தாய்மாமன் சிவகுரு மற்றும் சதீஷ் என்பவரோடு சேர்ந்துகொண்டு பிரகாஷிடம் பலமுறை ரூபாய் ஒன்றரை லட்சம் வரை பெற்றுக்கொண்டு காதலர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். 

Sponsored


இதை நம்பி பிரகாஷ் பணம் கொடுத்திருக்கிறார். இதற்கிடையே திடீரென பிரகாஷ் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து விலகி, 'எனது அக்கா மகளை உனக்கு திருமணம் செய்து வைக்க இயலாது' என கூறியதால் பிரகாஷ் மனமுடைந்தார். நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் கரூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு வரப்பட்டது. அங்கே பிரகாஷின் உறவினர்கள், பணத்தைப் பெற்று ஏமாற்றிய பெண்ணின் தாய்மாமன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் திடீர் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி பிரகாஷ் உறவினர்களின் கோபத்தை தணித்தனர்.

Sponsored


நம்மிடம் பேசிய பிரகாஷின் உறவினர்கள், ``பிரகாஷிடம் அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி ஒன்றரை லட்சம் வரை பணம் வாங்கி இருக்கிறார் பெண்ணோட தாய்மாமன் சிவகுரு. அதை நம்பி பிரகாஷும் பணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், பிரகாஷிடம் இனிமேல் பணம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு, 'என் அக்கா மகளை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது'ன்னு மாத்தி பேசி இருக்கிறார். இதனால், மனமுடைந்த பிரகாஷ் இப்படி ஒரு முடிவை தேடிகிட்டான். இதுக்காய்யா நாங்க பிள்ளைப் பெத்து வளர்த்தோம். எங்க பிள்ளை சாவுக்கு காரணமான சிவகுரு, சதீஷ் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிற வரைக்கும் ஓயமாட்டோம்" என்றார்கள்.Trending Articles

Sponsored