அழகிரிக்கு வாழ்த்து சொன்ன மு.க.முத்து..!Sponsored`என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்' என்று மு.க.முத்து அழகிரிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தி.மு.கவில் தன்னை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அழகிரி தலைமையில் நேற்று சென்னையில் பேரணி நடைபெற்றது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டத் தொண்டர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி, திருவல்லிக்கேணி காவல்நிலையத்திலிருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. பேரணியின்போது, 'கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் இது நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது.

Sponsored


Sponsored


இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி' என்று தெரிவித்தார். இருப்பினும், அவருடைய பேரணிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அழகிரியின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். முன்னதாக, கருணாநிதியின் மூத்த மகனும், அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் அண்ணனுமான மு.க.முத்து, அழகிரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்'  மு.க.முத்து' என்று குறிப்பிட்டுள்ளார். Trending Articles

Sponsored