`ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்தணும்' - மதுரை சிறையில் முகிலன் உண்ணாவிரதம்!Sponsoredஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று மேற்கொள்ள இருக்கும் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரை மத்திய சிறையில் முகிலன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். 

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுற்றுச்சூழல் போராளியான முகிலன், தற்போது மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கிறார். முகிலனின் 10 கோரிக்கைகள் வருமாறு: 

Sponsored


1. தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் இன்று நடக்கும் பெட்ரோலியம் என்ற பெயரில் மீத்தேன், ஷேல்மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உட்பட அனைத்து திரவ, வாயு வடிவிலான எரிபொருள்களை தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளிட்ட 55 வட்டாரங்களில் எடுக்க அனுமதி வழங்கும் டெண்டரை இந்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் வழங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

Sponsored


2. எட்டு வழிச் சாலை அமைக்க கருத்து கேட்க விலக்கு அளிக்கும் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.

3. தமிழகத்திடம் இருந்த சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, கச்சத்தீவு ஆகியவற்றை தாரை வார்த்ததால் தண்ணீர் பிரச்னையும், மீனவர்களுக்கு சிக்கல்களும் உருவாகின்றன. அதனால் 1956-ல் குமரி மாவட்டத்தையும், 1961-ல் திருத்தணியையும் மீட்டது போல் அவற்றை மீட்டெடுக்க வேண்டும்.

4. வைகை ஆறு வறண்ட பாலைவனம் போல பல ஆண்டுகளாக உள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தெ.புதுக்கோட்டையில் வழங்கப்பட்ட மாஸ்வொலி அனுமதியை ரத்துசெய்து, பார்த்திபனூர் மதகு அணையைக் காப்பாற்ற வேண்டும்.

5. பாலம் மற்றும் தடுப்பணைகளின் அருகில் சட்டவிரோத மணல் கொள்ளை நடப்பதைக் கண்காணிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமைத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்ற வழக்கறிஞர்கள் அழகுமணி, சரவணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர், கரூர் தோட்டக்குறிச்சி முதல் கும்பகோணம் நல்படுகை வரை 8 நாள் காவிரி, கொள்ளிடத்தில் ஆய்வுசெய்து 2017-ல் அறிக்கை தாக்கல்செய்தனர். அதைச் செயல்படுத்தாததே முக்கொம்பு தடுப்பணை உடையக் காரணம். அதற்குப் பொறுப்பேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசும் பதவி விலக வேண்டும்.

6. மாணவி ஷோபியாவையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்த தமிழிசை சௌந்தரராஜன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் நீதி கேட்ட வீரத்தமிழச்சி ஷோபியா மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.

7. காந்தியைக் கொலை செய்தவர்கள் 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி கொலையைக் காரணம் காட்டி 7 தமிழர்களை 27 ஆண்டுகளாகச் சிறையில் வைத்திருப்பது நியாயமல்ல. அதனால், 7 தமிழர்களையும் விடுதலைசெய்ய வேண்டும்.

8. மோடியைக் கொல்ல சதி செய்ததாகக் கைதுசெய்யப்பட்டுள்ள எழுத்தாளர் வரவரராவ், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பெர்னான் கான்சால்வஸ், அருண்பெரைரா, கடியும்நவலா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் ஆகியோரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும். தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள திருமுருகன், மதுரை தி.வி.க பொறுப்பாளர் மணிகண்டன் ஆகியோரை விடுதலைசெய்ய வேண்டும். 

9. வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவன பொறுப்பாளரை தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக, லண்டனில் பிரதமர் சந்தித்துப் பேசியது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

10. சுங்கச் சாவடிகளில் ஒப்பந்தம் காலாவதியான பின்பும் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

இந்த 10 கோரிக்கைகளை வலியுறுத்தி முகிலன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.Trending Articles

Sponsored