நெடுஞ்சாலைத் துறையில் 'பேக்கேஜ் கான்ட்ராக்ட்!' - விதிகளை மீறும் முதல்வர் அலுவலகம்!Sponsored' நெடுஞ்சாலைத் துறையில் பராமரிப்பு பணிகளைத் தனியாருக்குத் தருகின்றனர்; எங்களை மேற்பார்வையிடவேண்டாம் என்கிறார்கள்'   எனக் கொதிக்கின்றனர் சாலை ஆய்வாளர்கள். 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரிமுத்துவிடம் பேசினோம். 

Sponsored


 ``நெடுஞ்சாலைத் துறையில் ஆறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அதுதொடர்பான மனுவை நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநரிடம் வழங்கினோம். மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலைகளின் பராமரிப்புப் பணிகளை பேக்கேஜ் கான்ட்ராக்ட் என்று தனியாருக்கு வழங்குகிறார்கள். இதுவரை சாலை போடும் பணிகளைத்தான் தனியாருக்கு வழங்கிவந்தனர். இப்போது பராமரிப்புப் பணிகளையும் தனியாருக்கு வழங்குகிறார்கள். அதை மேற்பார்வை செய்யும் பொறுப்பு சாலை ஆய்வாளருக்குத்தான்( Road Inspector) உண்டு. ஆனால், தற்போது அந்தப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டு விட்டதால், பார்வையிட வேண்டாம் என்கிறார்கள். ஆனால், அரசு விதியில் அவ்வாறு இல்லை. அதனால், ஆய்வாளர்கள் செய்யும் பணிகளை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோன்று, நீண்ட காலமாக இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுகளுக்கான விதி இருந்தும் இதுவரை அது வழங்கப்படவில்லை.  அதை உடனடியாக வழங்க வேண்டும்" என்றார். 

Sponsored


' நெடுஞ்சாலைத் துறையை கையில்வைத்திருக்கும் முதல்வர், இதுபோன்ற முறைகேடுகளைக் களைய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்' சாலை ஆய்வாளர்கள். Trending Articles

Sponsored