நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் மரணம்!Sponsored'முதுபெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவாக இருந்த அவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள மகள் வீட்டில் உயிரிழந்தார்.'

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பி.பி.சுப்பையா என்னும் வெள்ளை சுப்பையா. 80 வயதான இவர்,  இளம் வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் தமிழ்த் திரைத்துறைக்கு வந்துள்ளார். தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர் 'வைதேகி காத்திருந்தால்' 'கரகாட்டக்காரன்' உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

Sponsored


நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் என ஆரம்பித்து இன்றைய இளம் நட்சத்திரங்களின் படங்கள் வரை நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். தமிழக அரசின் விருது, கலை பண்பாட்டுத்துறை விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். சிறுநீரகப் பிரச்னை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட வெள்ளை சுப்பையா, கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது நடிப்புத் தொழிலை கைவிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து உள்ள சிவன்புரம் காலனி பகுதியில் உள்ள தன் ஒரே மகளான தனலட்சுமி வீட்டில் மனைவி சாவித்திரியோடு தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென்று  அவர் உயிரிழந்தார். இன்று பிற்பகல் இவரது உடல் மேட்டுப்பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

Sponsored
Trending Articles

Sponsored