'அடுத்த டி.ஜி.பி யார்?' - குட்கா விவகாரத்தில் அடுத்த கட்டம்!Sponsoredதமிழக டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரனை மாற்ற வேண்டும் என்று சி.பி.ஐ வலியுறுத்தியதைத் தொடர்ந்து, விரைவில் தமிழக டி.ஜி.பி-யாக மகேந்திரன்  நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

குட்கா ஊழல் தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அந்தச் சோதனையைத் தொடர்ந்து, தரகர்களாகச் செயல்பட்ட இருவரும், குட்கா நிறுவனர் உரிமையாளர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். மேலும், அரசு அதிகாரிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

Sponsored


இதற்கிடையில், ரெய்டு விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கிய சி.பி.ஐ, 'சோதனை முழுவதும் நிறைவடைந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.கே.ராஜேந்திரன், தமிழக டி.ஜி.பி-யாக இருந்தால் சரிவர விசாரணை மேற்கொள்ள முடியாது. அவருக்குக் கீழ் பணியாற்றும் மூன்று ஐஜி-க்களும் குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை நெருங்கினால் ராஜேந்திரனின் தலையீடு இருக்கலாம். எனவே, அவரை அந்தப் பணியிலிருந்து மாற்ற வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதையடுத்து, தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. டி.கே.ராஜேந்திரன் தற்போது பதவி நீட்டிப்பில் டி.ஜி.பி-யாக இருக்கிறார். இந்த நிலையில், அவரை வேறு பதவிக்கு மாற்ற முடியாது. எனவே, அவர் ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது. அவருக்குப் பதிலாக, மகேந்திரன் இடைக்கால டி.ஜி.பி-யாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளன. 

Sponsored
Trending Articles

Sponsored