அரித்து எடுக்கப்படும் கடல் மணல்.. கலக்கப்படும் சிலிக்கான் மணல்.. இது நவீனக் கொள்ளை!Sponsoredற்றுமணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தும் பணியே இன்னும் முற்று பெறாத நிலையில், தற்போது கடல் மணலுக்கும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. `கடல் மிகப் பெரிது, கடலில் மணல் எடுப்பதால் எந்த ஆபத்தும் வராது' என்றும் இதைச் சாதாரணமாக நாம் ஒதுக்கி விட்டுப் போய்விட முடியாது. இருப்பதிலேயே இதுதான் மிகவும் ஆபத்தான விஷயம். கடல் மணலை, அலைகரைகளில் எடுக்க, எடுக்க, கடல்நீர் ஊருக்குள் எளிதில் புக ஆரம்பித்து விடும். அப்படி ஊருக்குள் புகும் உப்புக் கடல்நீரால், விளைநிலங்கள் மட்டுமல்லாது, நிலத்தடி நீர்ச்சுரப்பும் பாதிக்கப்பட்டு, ஊரே உப்பு மயமாகி விடும்.

கடல்நீரில் குடிநீர் தயாரிக்கும் பணியைச் செய்யப் போவதாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டத்தின் மூலம், எத்தனை ஊருக்குக் குடிநீர் கிடைக்கிறது என்பதற்கே இன்னும் விடை தெரியாத நிலையில், இன்னொரு ஆபத்தும் இதோடு சேர்ந்துள்ளது. ஆற்றுமணல் கிடைப்பதில் இப்போது கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. முழுதும் மணல் எடுத்து முடிக்கப்பட்ட ஆறுகள், அடுக்குமாடி வீடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன. டிமாண்ட் அதிகம் ஆக, ஆக, ஆற்றுமணலுக்கான விலையும், பத்துமடங்கு கூடுதலாக எகிறியுள்ளது. `இவ்விடம் சுத்தமான ஆற்றுமணல் கிடைக்கும்.. யூனிட் ஒன்றுக்கு 2 லட்ச ரூபாய் மட்டுமே' என்று அறிவிக்காத குறையாக விலை இருக்கிறது. பழைய விலைப்படி, ஒரு லாரி ஆற்று மணல் ரூ. 70 ஆயிரம் வரை விலை போனது. அதாவது ஒரு யூனிட் அளவு. அதுவே டேரஸ் லாரி எனப்படும் பெரிய லாரிகளில் 10 யூனிட் அளவிலான மணல் பிடிக்கும் என்பதால், அது 5 லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையானது. இப்போது இன்னும் சில லட்சங்கள் கூடுதல் விலைக்கு அவை போகலாம்.

Sponsored


நம்மிடம் பேசிய பழவேற்காடு பகுதி சமூக ஆர்வலர் ஷகீல், ``தமிழகத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அமைந்துள்ளது. இது, முப்பதுக்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைக் கொண்டது. இப்பகுதியில் உள்ள காட்டுப்பள்ளி, காலாஞ்சி கடற்கரையில் அதிகாரிகளின் துணையோடு சட்ட விரோதமாக 30 முதல் 40 அடி ஆழம் வரை கடற்கரையில் குழி தோண்டி வைத்து கடல் மணலை அள்ளிச்செல்லும் வேலை நடக்கிறது. நூற்றுக்கணக்கான லாரிகள் இதற்காகப் பயன்படுத்தப் படுகிறது. கடல் மணலைக் கொண்டுபோய், சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மறைவிடங்களில் வைத்து ஆற்று மணலுடன் கடல் மண்ணைக் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து, இந்தக் கடற்கரையில் மணல் அள்ளுவதால் கடல் அரிப்பு, ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள மீனவக் கிராமங்களுக்குள் கடல்நீர் புகும் ஆபத்து உள்ளது. கடற்கரையில் ஏற்படும் மணல் சரிவுக்கும் இதுவே காரணம். வட சென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் துறைமுகம் மற்றும் கடல்நீரை நன்னீராக்கும் ஆலை போன்றவை கடல்மண் எடுக்கும் பகுதிக்கு மிக அருகே அமைந்துள்ளன. இந்தக் கட்டடங்கள் விரைவில் ஸ்திரத்தன்மையை இழந்து, இடிந்து விழும் நிலைக்குத் தள்ளப்படும்" என்றார்.

Sponsored


அதேபகுதியைச் சேர்ந்த ஆனந்தன், ``ஆற்றுமணலுக்கும், கடல் மணலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. வெளியூர் ஆர்டரே நாளொன்றுக்கு 50 ஆயிரம் யூனிட் மணலுக்குக் குறையாமல் இருப்பதால், இந்த வேலையில் மணல் கொள்ளையர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆகஸ்ட் 29 ம் தேதி நாங்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி காட்டுப்பள்ளி பகுதியில் ஆய்வு செய்து, 150 யூனிட் மணலைக் கைப்பற்றியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அரசு நடவடிக்கைக்காகப் போராட வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருக்கிறது. கடல் மணலுடன் ஆற்று மணல் கலந்து கட்டப்படும் வீடுகள், மேம்பாலங்கள், அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் குறுகிய காலத்துக்குள் இடிந்து விழும். கடலரிப்பு காரணமாகக் கடல்நீர் நிலப்பரப்பில் புகுந்தால் நிலத்தடி நீர் அதன் தன்மையை இழந்து உப்புநீராக மாறி குடிநீர்த் தட்டுப்பாடும், விலை நிலங்களில் நடைபெறும் விவசாயமும் பாதிக்கப்படும். எனவே, பேரிழப்புக்கு முன்னதாக, தமிழக அரசு பழவேற்காடு கடற்கரையில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தென்னிந்திய மீனவர் பேரவைத் தலைவர் ஜெய.பாலையன், ``கடல்மணலின் உப்புத்தன்மை வெகுவாகக் குறைக்கப்பட்டு, தரமான ஆற்று மண் போன்றே அது விற்பனைக்கு வருகிறது. `சுவீட் எடு கொண்டாடு' என்பது போல, மணலை நாக்கில் வைத்து சோதித்துப் பார்த்தாலும் ஏமாற்றம்தான் மிஞ்சும். கண்ணாடியை வெட்ட பயன்படுத்தப்படும் சிலிக்கான் மணல் எனப்படும் ஆந்திர கடல் மணலை, 15 முதல் 20 யூனிட் என்ற அளவுக்குக் குறையாமல் ஒவ்வொரு முறையும் இங்கு கொண்டு வந்து விடுகிறார்கள். ஒரு யூனிட் சிலிக்கான் மணலில் 20 யூனிட் கடல் மணலைக் கொட்டிக் கலந்து விடுகிறார்கள். கண்ணாடிச் சில்கள் போல பளபளக்கும் இந்த சிலிக்கான் மணல், கடல் மணலுக்கு வெண்மையும் ஆற்றுமணல் போன்ற மினுமினுப்பையும் கொடுத்து விடும். பொதுவாகவே மேலோட்டமாக அள்ளப்படும் ஆற்று மணலும், ஏரி மணலும் லேசான பழுப்பு நிறத்துடன்தான் காணப்படும். முப்பதடி ஆழத்துக்கு மேல் போனால், அதே மணல், வெண்மைக்கு மாறிவிடும், அந்தத் தரத்தோடு நேர்செய்து காட்டத்தான், கடல்மணலில் சிலிக்கான் கண்ணாடி மணலைக் கலக்கிறார்கள். சிலிக்கான் மணல், ஆந்திராவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. கட்டடங்களைக் கட்ட இந்த சிலிக்கான் மணலைப் பயன்படுத்துவது குற்றம். சிலிக்கான் மணலைப் பயன்படுத்த தடையும் இருக்கிறது. கலப்படக் கடல்மணலை ஆற்றுமணலாக்கி விற்கும் வேலைக்குத்தான் இப்போது அதிகளவு வருமானம் இருக்கிறது. வெளியூர் ஆர்டரே நாளொன்றுக்கு 50 ஆயிரம் யூனிட் மணலுக்குக் குறையாமல் இருப்பதால், இந்த வேலையில் மணல் கொள்ளையர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்" என்றார்.

`எங்கள் மாவட்டத்தில் ஆற்றுமணல் இனிக்கும் தெரியுமா?' என்று ஏரியாவில் சொல்லிக்கொண்டு சிலர் சுற்றுகிறார்கள். சிலரை பிடித்துக் கேட்டோம். ``கடல்மணலை லாரிகளில் ஏற்றிப் போவதற்கு முன், இங்கேயே ஒரு இடத்தில் குவித்துப் பரப்பி மணலைக் காயவிடுகிறார்கள். பின்னர், அதில் ஏதோவொரு திரவத்தைத் தெளித்து மீண்டும் மணலைப் பரப்பிக் காய விடுகிறார்கள். கடல்மணல் இனிப்பாகவும், வெண்மை கலந்தும் கண்முன்னே காட்சியளிக்கிறது" என்கிறார்கள்.

பிறகென்ன, முகலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடங்கள் போல நான்கைந்து கட்டடங்களைக் கட்டிமுடிக்க, மணல் குவியல் ரெடி!Trending Articles

Sponsored