`நிவாரணமும் கிடையாது; பட்டாவும் கிடையாது' - ஆக்கிரமிப்பாளர்களைத் தெறிக்கவிட்ட உயர் நீதிமன்றம்!Sponsored"நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கொடுங்குற்றம். நீர் நிலைகளை ஆக்கிரமித்த நிலங்களுக்குப் பட்டா கிடையாது"  என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில், குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய உரிமையாளர்கள், தங்களுக்கு நிலப்பட்டா வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டியிருக்கும் இடங்களுக்கு பட்டா தர முடியாது. நீர் நிலைகளை ஆக்கிரமித்திருப்பது பெருங்குற்றம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகுறித்து 2 வாரத்துக்குள் ஆய்வுக் கூட்டம் நடத்தி, இரண்டு மாதங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகளை அகற்றுவதுகுறித்த அறிக்கைகளை 3 மாத காலத்துக்குள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள்மீது சென்னை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருக்கும் மக்களுக்கு நிவாரண நிதி வழங்கக் கூடாது என்றும் வருவாய்த் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored