திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா!Sponsoredஇந்திய துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா, இன்று திருச்சி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு தனி நீதிமன்றத்தில் ஆஜரானதால், திருச்சி நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

திருச்சி வேளாண் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பெரியசாமி என்பவர், தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை வழங்குவதற்கு, அப்போதைய திருச்சி மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் உதயகுமார் என்பவர் லஞ்சம் கேட்டதாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில், 2007-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Sponsored


இந்த வழக்கு, திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அப்போதைய தமிழக அரசின் வேளாண் துறை முதன்மைச் செயலாளரும், இப்போதைய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளருமான சந்தீப் சக்சேனா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த சந்தீப் சக்சேனா ஐஏஎஸ்ஸுக்கு திருச்சி மாவட்ட கலெக்டரின் வாகனம் வழங்கப்பட்டது. அரசு சாட்சியமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவே, மாவட்ட வருவாய் அதிகாரியும் அவருடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். இந்தத் தகவலறிந்த பத்திரிகையாளர்கள் குவிந்ததால், நீதிமன்ற வளாகம் பரபரப்பானது.

Sponsored


நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியமான சந்தீப் சக்சேனாவை சம்பந்தப்பட்டவரின் வழக்கறிஞரான பதஞ்சலி விருத்தாசலம் குறுக்கு விசாரணை செய்தார். தமிழக அரசின் ஆணைப்படி கொடுக்கப்படும் இசைவுக் கடிதங்கள் தமிழில் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா எனக் கேட்க, `எனக்குத் தெரியவில்லை’ எனப் பதிலளித்தார் சந்தீப் சக்சேனா.

குற்றம்சாட்டப்பட்ட உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு ஏதேனும் நிர்பந்தம் கொடுக்கப்பட்டதா, இல்லை தன்னிச்சையாக முடிவெடுத்தீர்களா எனக் கேட்க, `இந்த விவகாரத்தில் நான் தன்னிச்சையாக முடிவு எடுத்தேன்’ எனப் பதில் கூறினார். அடுத்து, தான் வழங்கிய கடிதத்தைத் தாங்களே தயாரித்தீர்களா எனக் கேட்ட கேள்விக்கு, நானும் எனது அப்போதைய உதவியாளரும் சேர்ந்து தயாரித்தோம் என்றார்.

சந்தீப் சக்சேனா வேளாண் துறை அரசு முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியபோது, பெரியசாமி கொடுத்த புகாரின்மீது தவறு நடக்க முகாந்திரம் இருப்பதாக உணர்ந்து, அவர்கள் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க இசைவுக் கடிதம் வழங்கியதால், சந்தீப் சக்சேனா முக்கியமான சாட்சியாக விசாரிக்கப்பட்டார். இந்தியத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா ஆஜரானதால், நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காட்சியளித்தது.Trending Articles

Sponsored