`அது நடந்தால் நாங்கள் அவர்களுடன் இணைந்துகொள்கிறோம்' - அ.தி.மு.கவுக்கு சவால் விடுக்கும் தங்க தமிழ்ச்செல்வன்!Sponsoredதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாங்கள் தான் வெற்றிபெறப் போகிறோம் என டி.டி.வி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

ஏ.கே.போஸ், கருணாநிதி மறைவுக்குப் பிறகு திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது. இங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விரைவில் செய்யும் எனத் தெரிகிறது. இடைத்தேர்தலைச் சந்திக்க கட்சிகளும் தயார் ஆகி வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்காத நிலையில் டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இப்போதே தேர்தல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துள்ளது. திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் மூலம் கட்சியின் `குக்கர்' சின்னத்தைப் பிரபலப்படுத்தி வருகின்றனர். இதேபோல் திருவாரூரில் தினகரன் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தி முடித்துள்ளார்.  

Sponsored


இந்த நிலையில், இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க-வுக்கு டி.டி.வி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் சவால் விடுத்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த மூக்கையா தேவரின் 39-வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் தங்க தமிழ்ச்செல்வன் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாங்கள் தான் வெற்றிபெறப் போகிறோம். அதன்பிறகாவது அவர்கள் மனம் திருந்தி அ.தி.மு.கவையும், கட்சி சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இடைத்தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்றுவிட்டால் நாங்கள் அவர்களுடன் இணைந்துகொள்கிறோம். ஆனால், நாங்கள் வெற்றிபெற்றால் அவர்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்களா?" எனக் கூறினார். 

Sponsored
Trending Articles

Sponsored