`நான் தலைவன் அல்ல; தனி ஒருவன்' - ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்த அழகிரிSponsoredதனது அழைப்பை ஏற்று அமைதிப் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அழகிரி.

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் 30 வது நாள் நினைவுநாள் அமைதிப் பேரணி கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. திருவல்லிக்கேணியில் இருந்து காலை 10 மணியளவில் தொடங்கிய அமைதிப் பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மதுரையிலிருந்தும் அழகிரியின் ஆதரவாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அழகிரியுடன் அவரின் மகன் துரை தயாநிதியும் பங்கேற்றார். 

Sponsored


கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், `கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் இது நடத்தப்படவில்லை' என விளக்கம் கொடுத்தார் அழகிரி. 

Sponsored


இந்நிலையில், பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தலைவர் கலைஞரின்  என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே... எனத் தொடங்கும் கடிதத்தில், `நான்... ஒரு தலைவன் அல்ல, ஒரு மேடை பேச்சாளன் அல்ல, ஒரு நடிகன் அல்ல, தனி மனிதனாய், தொண்டனாகிய என் வேண்டுகோளை ஏற்று என் தந்தை தலைவர் கலைஞரின் 30 வது நாள் நினைவு பேரணிக்கு அஞ்சலி செலுத்த என் மீது பாசங்கொண்டு அலைகடலென வருகை தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.Trending Articles

Sponsored