`விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்; ஏன் ராஜினாமா செய்யணும்'- விஜயபாஸ்கருக்காகக் குரல்கொடுக்கும் கடம்பூர் ராஜூSponsored"ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்" என  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரபுரம் முதல் குருமலை வரையிலான 7.7 கி.மீ தொலைவிலான சாலைப் பணிகள் ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், " முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின்  கவனத்துக்கு எடுத்துச் சென்றவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதற்கு மத்திய அரசு மறுப்பு  தெரிவித்தபோதிலும், உச்ச நீதிமன்றம் சென்று 7 தமிழகளின் விடுதலைக்காக முனைப்புடன் செயலாற்றினார். தொடர்ச்சியாக அவரது வழியில் செயல்படும் இந்த அரசு உறுதியாக இருந்த காரணத்தினால்தான் தற்போது 7 பேரின் விடுதலைகுறித்த முடிவை தமிழக அரசே எடுத்துக்கொள்ளலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Sponsored


25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள இந்த 7 பேரின் விடுதலைக்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்யும். அதற்கான நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளது அரசு.  சிபிஐ பல்வேறு வழக்குகளை விசாரித்துவருகிறது. பல்வேறு நிலைகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள்மீது விசாரணையில் இருந்து யாரும்  ராஜினாமா செய்யவில்லை. குட்கா ஊழல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு  அமைச்சர் விஜயபாஸ்கர் முழு ஒத்துழைப்பு தருகிறார். அரசும் அந்த விசாரணையில் குறுக்கீடு செய்யவில்லை.  தற்போது விசாரணைதான் நடைபெற்றுவருகிறது. எனவே, அமைச்சர் பதவி விலகத் தேவையில்லை. தி.மு.க எங்களுக்கு எதிர்க்கட்சி இல்லை, எதிரிக்கட்சிதான். ஊழலால் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதலில் அவருடைய சகோதர சண்டையைத் தீர்த்துக்கொள்ளட்டும்"  என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored