குட்கா விவகாரத்தில் மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்குட்கா விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Sponsored


மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தின் புத்தன் அணை, முக்கடல் அணை ஆகியவற்றில் குடிநீர் திட்டங்களை இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாகர்கோவில் நகராட்சிக்கு நிரந்தர குடிநீர் வழங்கும் விதமாக மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் 112 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 151 கோடி ரூபாயில் மீதமுள்ள தொகையை மாநில அரசு வழங்குகிறது. குட்கா விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் தெளிவு படுத்தப்பட வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும். இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். குட்கா விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது.

Sponsored


Sponsored


மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டுமானால் மாநில அரசுகள் இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி குழுவில் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு மட்டுமே முடிவு எடுக்க முடியாது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொதுமக்களைப் பாதிக்கிறது என்ற போதிலும் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கைவிட முடியாது" என்றார்.Trending Articles

Sponsored