சி.பி.ஐ சோதனைக்கு நடுவிலும் குறைதீர்ப்பு முகாம்! - அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டம்Sponsoredகுட்கா விவகாரத்தில் அடுத்தடுத்த சோதனைகள் நடந்து வரும் வேளையில், சொந்தத் தொகுதியில் சுற்றுப் பயணம் நடத்த இருக்கிறார் அமைச்சர். 
 
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது குட்கா விவகாரம். இந்த விவகாரத்தில், அமைச்சரவையிலிருந்து விஜயபாஸ்கர் நீக்கப்படலாம் என்ற தகவல் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் சொந்த தொகுதியில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை காலை சொந்த ஊருக்கு வரும் அமைச்சர்,  மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, புதுக்கோட்டை மாவட்டக் கலெக்டர் கணேஷ் ஆகியோர் சகிதமாக விராலிமலை தொகுதிக்குட்பட்ட கல்குடி, பூதகுடி, வடுகப்படி உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களான கல்குடி, தாளப்பட்டி, பொருவாய் , வடுகப்பட்டி, அம்பாள் நகர், ரத்னா கார்டன், திடீர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கத் திட்டமிட்டுள்ளார். 
 
 
 
 

Sponsored
Trending Articles

Sponsored