கடையை ஒதுக்கீடுசெய்ய லஞ்சம் - கிருஷ்ணகிரியில் திட்ட இயக்குநர், பதிவு எழுத்தர் கைது!Sponsoredஅரசுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடையை ஒதுக்கீடுசெய்ய ரூ.15,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட இயக்குநர், பதிவு எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி டி.பி.ரோட்டைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் வெல்லமண்டி வைத்துள்ளார். இவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமைக்குச் சொந்தமான வணிக வளாகக் கடையை வாடகைக்குக் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், கடையை வாடகைக்குப் பெற வேண்டும் என்றால் ரூ.15,000 ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நரசிம்மனுக்கு லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று இயக்குநர் அலுவலகத்தில் பதிவு எழுத்தராகப் பணியாற்றும் சத்தியமூர்த்தி, ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

Sponsored


லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயக்குமார், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரம் பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அவரைப் பின்தொடர்ந்து சென்ற, மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் ஏட்டுகள் முருகன், விஜயகுமார், மணிவண்ணன், ராஜா, மஞ்சுநாத் ஆகியோர் லஞ்சப் பணம் கைமாறியபோது திட்ட இயக்குநர் நரசிம்மனையும், பதிவு எழுத்தர் சத்தியமூர்த்தியையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

Sponsored


கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வழக்கில், திட்ட இயக்குநர் மற்றும் பதிவு எழுத்தர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored